இறையியல் கழகத்தில் வாயில்கள் மூன்றெனப் பகுக்கப்பட்டது.

உள் வாயில்

உள்வாயில் எனப்படுவது முதல் வாயில். இதில் இரண்டு புலங்கள் உள்ளன. மனம் மற்றும் வாழ்வியல். மனம் எனும் புலத்தின் கீழ் மனம் என்ற துறை இயங்கும். வாழ்வியல் புலத்திற்கு கீழ் வாழ்வியல் என்ற துறையும், ஊர் வாழ்வியல் என்ற துணைத் துறையும் என இரண்டு துறைகள் இயங்கும். மனம் மற்றும் வாழ்வியல் சார்ந்த பாடங்கள் உள் வாயில் எனும் பிரிவில் நடத்தப்படும்





நுழை வாயில்

இது மூன்றாம் வாயில். இதில் இரண்டு புலங்கள் உள்ளன. ஐந்தாம் புலம் பூதவியல், ஆறாம் புலம் மெய்யியல். இந்த புலங்களே துறைகளாகவும் செயல்படும். இந்த மூன்றாம் வாயிலில் உள்ள பாடத்திட்டங்கள் மிகவும் நுட்பமான, நுண்மையான கருத்துகள் கொண்டவையாக அமைய பெற்றிருக்கும். அதாவது, உணர்ச்சி இயல், ஆக்கை உணவு, எண் நூல் சூத்திரங்கள், ஆற்றல் நூல், இசை நூல், வளை நூல் சூத்திரங்கள், சிவபுராணம், திருவண்டப்பகுதி, தமிழ் நூல் மறை மொழிகள், மருந்து நூல் மறுமொழிகள் என மிகவும் ஆழமான பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  
 

வெளி வாயில்

இது இரண்டாம் வாயில். இந்த வாயிலில் இரண்டு புலங்கள் உள்ளன. மூன்றாம் புலம் ஆக்க வெளி என்றும் நான்காம் புலம் கலை வெளி என்றும் பகுக்கப்பட்டுள்ளது. ஆக்க வெளியின் கீழ் ஆக்கை வெளி என்ற துறை இயங்கும். கலை வெளியின் கீழ் சிந்தை வெளி மற்றும் வினை நுட்பம் என இரு துறைகள் இயங்கும். இதில் ஆக்கை வெளி என்ற துறையில் உள்ள பாடங்கள் வெளிப்பாடுகளை குறித்த பாடங்களாக அமைய உள்ளது. கலை வெளி என்ற துறையில் உள்ள பாடங்கள் சிந்தை உணரும் வகையில் அமைந்திருக்கும்.  
 
 

ம. செந்தமிழன் அவர்களின் வாழ்க்கை குறிப்புக்கள்

வாழ்க்கைக் குறிப்பு

ம. செந்தமிழன் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகிலுள்ள ஆச்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை பெ. மணியரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவரும், கட்சியின் கொள்கை இதழான தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும் ஆவார். செந்தமிழனின் மனைவி காந்திமதி ஒரு கல்லூரி பேராசிரியை மற்றும் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர்.

1990 களில் தன் பள்ளிப் பருவத்திலிருந்து தமிழக மாணவர் முன்னணி அமைப்பின் தீவிர செயற்பாட்டாளராக இருந்து, தமிழ்த் தேசிய ஆக்கத் திட்ட செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். 1995 ஆம் ஆண்டு ஜெ. ஜெயலலிதா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டிற்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்டதன் காரணமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டவர். பல்வேறு அச்சு ஊடகங்களில் பணிபுரிந்தவர்.  
 

படைப்புகள்

ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் ‘ஆடோடிகள்’, மறைக்கப்பட்ட தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளைக் கண்டறிந்து சொல்லும் ‘பேசாமொழி’, நான்காம் ஈழப் போரில் காங்கிரஸ் அரசின் உதவிகளை ஆதாரங்களுடன் விளக்கி தமிழகமெங்கும் இளந்தமிழர் இயக்கத்தினரால் பரப்புரை செய்யப்பட்ட ‘தீர்ப்பு எழுதுங்கள்’ உள்ளிட்ட ஆவணப்படங்களை இயக்கியவர்.  
 
 

தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் அதன்வழியே தமிழ்நாட்டு பெண்களின் உளவியலை விளக்கும் ‘டிராகுலாவின் காதலிகள்; மனித சமூகத்தின் வளர்ச்சிப் படிநிலைகளையும், இன்றைய உலகமயமாதல் சூழலில் சமூகவியலையும், விளக்கிக் கூறும். நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்;’ உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதியவர். ‘சிங்களத்தின் இறுதிப்போர்’, ‘வீழவில்லை விடுதலைப்புலிகள்’ உள்ளிட்ட ஈழவிடுதலைக் குறித்தான குறுநூல்களையும் எழுதியுள்ளார்.

நிகழ்வுகள் மற்றும் வகுப்புகள் குறித்த அறிவிப்பு

கடவுள் மறுப்பு பேசி வந்தவனுக்கு, இறைவனின் அரவணைப்பு கிடைத்ததெப்படி?

ஆசான் ம.செந்தமிழன் ஐயா அவர்களின் வகுப்பு சம்பந்தமான
சில வலையொளி(youtube) காணொளிகள்.

செம்மை வெளியீட்டகம் நினைவுகளும் வேண்டுகோளும்